Wednesday 30 November 2016

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாநிலத்தலைவர் அவர்களின் பேட்டி

அரசு ஆசிரியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும்: அரசுக்கு தமிழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம்: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத பிரச்சனையால் அரசு ஆசிரியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அச்சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அமைக்கப்பட்ட குழுவின் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது, தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

எனவே தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிக்க வேண்டும் என்றார். செல்லாத நோட்டு பிரச்சனையால் அரசு ஆசிரியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tuesday 29 November 2016

ஊத்தங்கரை ஒன்றிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் செயற்குழு தீர்மானங்கள்


     


  


 
 
                                                                           செயற்குழு தீர்மானங்கள்


அன்புடையீர்! வணக்கம்!

·         புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்திட வேண்டும் .
·         2004  முதல் 2006 வரை உள்ள தொகுப்பூதிய காலத்தை இரத்து செய்துவிட்டு பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணிவரன்முறை செய்து அனைத்து பணப்பலன்களையும் வழங்கிட வேண்டும் .
·         MPhil மற்றும்  Phd உயர்க்கல்வி ஊக்க ஊதியம் , உயர்க்கல்வி பெறப்பட்ட நாளிலிருந்து பணப்பலன்கள் வழங்கிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுகிறது.
·         ஏழாவது ஊதியக்குழுவை உடனே அமல்படுத்திட வேண்டும்.
·         01.07.2016  முதல் 7% அகவிலைப்படியை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் .
·          நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
·  பதிவுமூப்பு அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்து தகுதிகாண் பருவத்தை விரைந்து முடித்திட வேண்டும் .
·         இடைநிலை மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவில் குறைகளை கலைந்திட வேண்டும்.
·         அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
·         தற்போது அனைத்து பள்ளிகளில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களையும் முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்திட வேண்டும்.
·         புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும்.
·         எட்டாம் வகுப்பு மாணவர்கள் (NMMS) தேசியத்திறனாய்வுத் தேர்வில் வெற்றிப்பெற இச்செயற்குழு வாழ்த்துகிறது.
ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஊத்தங்கரை ஒன்றியம் வலியுறுத்துகிறது.. 

                                                                   *********************

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஊத்தங்கரை ஒன்றிய செயற்குழு நிகழ்வு


















தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஊத்தங்கரை ஒன்றியத்தின்  சார்பாக நடக்கும் செயற்குழு அழைப்பிதழ் .                                                                                                                                                                


அன்புடையீர்! வணக்கம்!
      இடம் :  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை
      நாள்  :  27.11.2016  ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணியளவில்
வரவேற்புரை:  திரு P.காசிநாதன் ஒன்றிய செயலாளர்,
  தலைமை :   திரு M.மாருதி அவர்கள் , ஒன்றியத் தலைவர்,
முன்னிலை :   திரு D.மணி ஒன்றிய அமைப்புச்செயலாளர்
                  திரு R. ஜோதியரசு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்
                  திருமதி J.கல்பனா ஒன்றிய மகளிரணி 
சிறப்பு அழைப்பாளர்:
                  டாக்டர் திரு V.M. அன்பரசன் மாநில துணைச்செயலாளர்,
    சிறப்புரை :      திரு  A.பெருமாள் அவர்கள் , மாவட்டத் தலைவர்,
                 திரு  R.சண்முகம் அவர்கள் , மாவட்ட செயலாளர்,
                 திரு  C. சரவணன்  அவர்கள் , மாவட்ட பொருளாளர்,              
வாழ்த்துரை :    திருமதி  T.சங்கீதா அவர்கள் , மாவட்ட மகளிரணி அமைப்பாளர்,
                   திரு S.செந்தில்நாதன் அவர்கள் , மாவட்ட அமைப்புச்செயலாளர்,
                   திரு S.சிவக்குமார் அவர்கள் , மாவட்ட சட்ட ஆலோசகர்,
                   திரு V.வெண்மதி அவர்கள் , மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர்,
                   திரு A.சரவணன் அவர்கள்  மாவட்ட துணைச்செயலாளர்,
                   திரு L.முருகன் அவர்கள் மாவட்டத் தணிக்கைக்குழு உறுப்பினர்,
                                  திரு V.பெருமாள் அவர்கள் , மாவட்ட செய்தி தொடர்பாளர்,
                   திரு T.ஆறுமுகம் மாநிலசெயற்குழு,
                   திரு D.சம்சு மாநிலபொதுக்குழு,             
வேண்டல்  :  அவசர அவசியமிக்க இச்செயற்குழுவில் கலந்துக்கொண்டு ஆலோசனைகள்  
                வழங்குமாறு அன்புடன் அழைக்கிறேன்                        
நன்றியுரை :     திரு J.விஜயகுமார் ஒன்றிய பொருளாளர் .   
 

Saturday 12 November 2016

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மத்தூர் ஒன்றிய பொதுக்குழு கூட்ட நிகழ்வு

மத்தூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்க்கு ஒன்றியத்தலைவர் திரு ஐ.சர்ஜான் அவர்கள் தலைமை தாங்கினார். ஒன்றியசெயலாளர் திரு பி.நாகூர்உசேன் அவர்கள் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றி மாநில செயற்குழு உறுப்பினர் திரு த.ஆறுமுகம் சொற்பொழிவாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு தெள.சம்சு மற்றும்      மாவட்டத்துணைத்தலைவர் திரு மு.சரவணன் ,  ஒன்றிய  மகளிர் அணி  செயலாளர் திருமதி அ.இந்திராகாந்திஆகியோர் கலந்துக்  ெகாண்டனர். இறுதியாக திருமதி வி.சக்தி அவர்கள் நன்றியுரை கூறினர்.




Thursday 10 November 2016

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு என தனி இணையதளம் தொடங்கப்பட்டது

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு என தனி இணையதளம் மாநில துணைச்செயலாளர் டாக்டர் V.M. அன்பரசன் தலைமையாசிரியர் அவர்களால் 10.11.2016 புதன் அன்று தொடங்கப்பட்டது ..